Tuvalu: மெதுவாக கடலில் மூழ்கும் தீவு; இடம்பெயரும் மக்கள் - காலநிலை மாற்றத்தால் க...
தம்பி எல்வினுடன் ராகவா லாரன்ஸ்... புல்லட் டீசர்!
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள புல்லட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகியது.
ரமேஷ் வர்மா இயக்கத்தில், ’கால பைரவா’ என்கிற பான் இந்தியப் படத்திலும் ‘டைரி’ பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புல்லட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், ராகவா லாரன்ஸ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சுனில், சிங்கம்புலி, வைஷாலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விரைவில் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.