செய்திகள் :

J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்கிறது?

post image

ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. முதல்வராகப் பதவியேற்ற ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதிகாரம் முழுவதும் லெப்டினனட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம்தான் இருக்கிறது.

இந்த நிலையில், லெப்டினனட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ``பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 98-ன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் தவறான கதைகளையும், பிரிவினைவாதத்தையும் பரப்புகின்ற 25 புத்தகங்களை உள்துறை அடையாளம் கண்டுள்ளது. அந்த புத்தகங்களுக்கு ஜம்மு - காஷ்மீரில் தடைவிதிக்கப்படுகிறது" என அறிவித்துள்ளார்.

லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தேடி வடக்கு முதல் தெற்கு வரை ஜம்மு - காஷ்மீரின் அனைத்து புத்தகக் கடைகளிலும் காவல்துறைக் குழுக்கள் சோதனை செய்து, பல தொகுதிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தடைசெய்யப்பட்ட புத்தகங்களில், பிரபல அரசியலமைப்பு நிபுணர் ஏ.ஜி. நூரானியின் ‘தி காஷ்மீர் டிஸ்பயூட் 914-2012’, சுமந்த்ரா போஸின் ‘காஷ்மீர் அட் க்ராஸ்ரோட்ஸ்’ மற்றும் ‘கான்டஸ்டு லேண்ட்ஸ்’, டேவிட் தேவதாஸின் ‘இன் சர்ச் ஆஃப் ஃபியூச்சர் - தி காஷ்மீர் ஸ்டோரி’, அருந்ததி ராயின் ‘ஆசாதி’, பத்திரிகையாளர் அனுராதா பாசின் எழுதிய ‘எ டிஸ்மண்டில்டு ஸ்டேட் - தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர் ஆஃப் ஆர்ட்டிக்கிள் 370’ ஆகியவை அடங்கும்.

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி, ``சுதந்திரக் கருத்துப் பரிமாற்றத்தில் ஜனநாயகம் செழித்து வளர்கிறது. புத்தகங்களைத் தடை செய்வதன் மூலம் வரலாற்றை அழிக்க முடியாது. அது பிரிவினையை மட்டுமே தூண்டுகிறது. காஷ்மீரில், ஜனநாயகக் குரல்களையும் அடிப்படை சுதந்திரங்களையும் அடக்குவது அந்நியப்படுதலையும் அவநம்பிக்கையையும் ஆழப்படுத்துகிறது. தணிக்கை கருத்துகளை மௌனமாக்காது, அது அவற்றின் அதிர்வுகளை அதிகரிக்கிறது,” என்று அவர் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - காரணம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, 'நோபல் பரிசு ஆசை' ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம். பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று! இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்த... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி தனது அறையில் ஆஜராக சொல்லும் நீதிபதி! - இன்று மாலை நடக்குமா அந்த சந்திப்பு?

பாமக-வில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழ... மேலும் பார்க்க

`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?’ - சீமான் காட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒ... மேலும் பார்க்க

`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்... மேலும் பார்க்க

US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரி பிளஸ் அபராத தொகை விதித்துள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட்டிடம் கேட்கப்பட்டது. அமெரிக்க... மேலும் பார்க்க

உ.பி: "கங்கை ஆசீர்வதிக்க வீட்டுக்கு வந்திருக்கிறது" - வெள்ளம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் விளக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடந்த சில நாள்களாக கங்கை மற்றும் யமுனை நதிகளின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடியிருக்கும் பல்வேறு பகு... மேலும் பார்க்க