இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்; வெகு சிறப்பாக திருவிழா...
பொதுக்குழு விவகாரம்! நீதிபதி அறைக்கு ராமதாஸ், அன்புமணி நேரில் வர உத்தரவு!!
சென்னை: பாமக பொதுக்குழு விவகாரத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பாமக பொதுக்குழுவை, அன்புமணி கூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வழக்குரைஞர்கள் இன்றி, ராமதாஸ், அன்புமணி இருவரும் தனது அறைக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் வருமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளது, பாமகவினருக்கு கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாக, சிவில் வழக்குகள், நீண்ட காலமாக நீடித்தால் மட்டுமே நீதிபதிகள் இந்த அணுகுமுறையைக் கையாள்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
பாமக தலைவர் என்ற முறையில், அன்புமணி பொதுக் குழுவைக் கூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ராமதாஸ் தரப்பில் முரளி சங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் வழக்குரைஞர்கள் இன்றி, இன்று மாலை தனது அறைக்கு வர நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.