செய்திகள் :

கர்நாடகத்தில் கொடூரம்! 3 கி.மீ. தொலைவுக்கு மனித உடல் பாகங்கள்!

post image

கர்நாடகத்தில் சாலையோரங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் ஒரு கோவில் அருகே வியாழக்கிழமை காலை 8 மணியளவில் கேட்பாரற்றுக் கிடந்த பாலிதீன் பை இருப்பதை அறிந்த அப்பகுதியினர், அதனைச் சோதனை செய்தனர்.

அந்தப் பையில் மனிதர் ஒருவரின் கைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மற்றொரு பையில் மற்றொரு கையும், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 3-ஆவது பையில் 2 கால்கள் உள்பட இதயம், குடல், வயிறு உள்ளிட்ட மனித உடல் பாகங்களும் கிடந்தன.

3 கி.மீ. சுற்றளவில் 5 இடங்களில் இருந்து இந்த மனித உடல் பாகங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இருப்பினும், தலையை மட்டும் தேடி வருகின்றனர்.

கிடைத்த உடல் பாகங்களை வைத்து ஆய்வு செய்ததிலும், கையில் இருந்த டாட்டூ மூலமும், இறந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வேறு ஏதோ ஓரிடத்தில் பெண்ணைக் கொலைசெய்து, அவரின் உடல் பாகங்களைத் துண்டுதுண்டாக வெட்டி, வேறுவேறு இடங்களில் மர்ம நபர்கள் வீசிச் சென்றிருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்ட உடல் பாகங்களை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்த காவல்துறையினர், காணாமல்போன பெண்கள் குறித்த புகார்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட பெண் யார்? அவர் ஏன் கொலைசெய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Woman murdered, body parts dumped at 8 locations in Tumakuru

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய அரசு!

இந்தியாவின் 11 மாநிலங்களில், 2025 ஆம் ஆண்டு துவங்கியது முதல், 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகள... மேலும் பார்க்க

தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

புது தில்லி: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால்... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாகக் கூறியுள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ... மேலும் பார்க்க

மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பு... மேலும் பார்க்க

10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியதுகுறித்து இந்தியா டுடே செய்தி ஊடகம் பெங்களூரில் உண்மை சரிபார்ப்பு நடத்தியது.பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்காளர் முறைகேடு ந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதுதில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசட... மேலும் பார்க்க