செய்திகள் :

தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கை தனித்துவமானது! முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கையில் தமிழ் பிரதானமான அடையாளமாக இருக்கும் என்று சென்னையில் நடைபெற்ற மாநிலக் கல்விக் கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்ததுடன், அதற்கான அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார்.

இந்த கொள்கைவெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 75 சதவிகிதத்தினர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அடுத்தாண்டில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓராண்டில் மட்டும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 901 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.

தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை தனித்துவமானது; முற்போக்குச் சிந்தனை கொண்டது. எதிர்காலத் தேவைக்கான ஆற்றலை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கையில் தாய்மொழியான தமிழ், பிரதானமான அடையாளமாக இருக்கும்.

படித்து மனப்பாடம் செய்வது போன்று அல்லாமல், சிந்தித்து கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. படித்த மாணவர்களாக மட்டுமல்லாமல், படைப்பாளர்களாகவும் அவர்களை உருவாக்கும். அறிவியலுக்கு புறம்பான சிந்தனைகள் இதில் இல்லை. இந்தக் கல்விக் கொள்கை மூலம் கல்வியில் உலகளாவிய போட்டிகளை நமது மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு, 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் பல்கலை. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியாா் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.

அதன்படி, சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரித்து, 2024 ஜூலை முதல் தேதியில் தமிழக அரசிடம் சமா்ப்பித்தனர்.

நீதிபதி அறைக்கு நேரில் வரச் சொன்னது ஏன்? அன்புமணி வழக்குரைஞர் பாலு விளக்கம்

சென்னை: பாமக பொதுக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வழக்கில், ராமதாஸ், அன்புமணி இருவரும் அறைக்கு நேரில் வருமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தது ஏன் என்பது குறித்த... மேலும் பார்க்க

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்

கடந்த வாரம் மதுரை வந்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், க... மேலும் பார்க்க

சமூக நீதி விடுதி பெயர் மாற்றம்! திமுக அரசுக்கு பாஜக கண்டனம்!

பள்ளி, கல்லூரி மாணவர்களின் விடுதிகளின் பெயர்களை சமூக நீதி விடுதிகள் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.சமூக நீதி விடுதி பெயர் மாற... மேலும் பார்க்க

பொதுக்குழு விவகாரம்! நீதிபதி அறைக்கு ராமதாஸ், அன்புமணி நேரில் வர உத்தரவு!!

சென்னை: பாமக பொதுக்குழு விவகாரத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.பாமக பொதுக்... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து! நடப்பு கல்வியாண்டு முதல்!!

சென்னை: மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.தம... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கான கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 8) வெளியிட்டார் மேலும் பார்க்க