தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய...
துணை ஜனாதிபதி: தனது 250-வது வேட்புமனுவை தாக்கல் செய்தார் `தேர்தல் மன்னன்’ பத்மராஜன்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் டயர் கடை உரிமையாளரான பத்மராஜன். 1959-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிறந்த இவர், தனது 30 வயதில் தொடங்கி தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.
இதுவரை 34 ஆண்டுகளில் 6 ஜனாதிபதி, 6 துணை ஜனாதிபதி, 5 பிரதமர் தேர்தல் உட்பட 249 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். 249 தேர்தல்களில் எந்தவித கட்சியையும் சாராமல் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார். 1988-ம் ஆண்டு தனது 30 வயதில் நண்பர்களுடன் விளையாட்டாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து பெரும் தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.

11 முதல்வர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார்!
குறிப்பாக, 1996ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளார். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இவர் முதல்வர் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
1988ம் ஆண்டு முதல் தற்போது வரை இவர் பெற்ற அதிகபட்ச வாக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 6,273 வாக்குகள் தான். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வீரக்கல்புதூரில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளா மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு 1,858 வாக்குகள் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி உட்பட்ட 11 முதல்வர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார்.
தேர்தல் மன்னன்
1993ம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற்ற தேர்தலில் தனது 3 வயது மகன் ஸ்ரீஜேஷ் பத்மராஜனை தேர்தலில் களமிறங்கியுள்ளார். மேலும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் பத்மராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளது. 34 ஆண்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக கூறுகிறார்.

டயர் கடை வைத்துள்ள இவரை "தேர்தல் மன்னன்" பத்மராஜன் என்று அனைவரும் அழைக்கின்றனர். இந்த நிலையில், "தேர்தல் மன்னன்" பத்மராஜன், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை டெல்லியில் உள்ள ராஜ்ய சபா செயலாளர் பி.சி.மோடியிடம் தாக்கல் செய்தார். இது அவரது 250வது வேட்புமனு ஆகும். சுயேட்சை வேட்பாளராக 249 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள பத்மாராஜன், இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88