வரலட்சுமி நோன்பு: நெல்லையப்பர் கோவிலில் 1,008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை!
திருச்செந்தூர்: 14-ம் தேதி கொடியேற்றம்; 23-ம் தேதி தேரோட்டம் - ஆவணித்திருவிழா முழு விவரங்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா வரும் 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 2-ம் திருவிழா அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 3-ம், 4-ம், 5-ம், 6-ம் திருவிழா ஆகிய 4 நாட்களிலும் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 5-ம் திருவிழா 18-ம்தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
20-ம்தேதி, 7-ம் திருவிழா அன்று கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை, காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
8-ம் திருவிழா, 21-ம்தேதி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15-க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோயில் சேருதல் நடக்கிறது.

9-ம் திருவிழா 22-ம்தேதி சுவாமி சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் மாறுபடும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான 23-ம்தேதி சனிக்கிழமை காலை காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
11, 12-ம் திருவிழா நாட்களில் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று 12-ம் திருவிழாவோடு விழா நிறைவு பெறுகிறது.