செய்திகள் :

காந்தாரா சேப்டர் - 1: கவனம் ஈர்க்கும் ருக்மினி வசந்த் போஸ்டர்!

post image

காந்தாரா சேப்டர் - 1 படத்தில் நடிக்கும் ருக்மினி வசந்த், பாத்திரத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.

கன்னட வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காந்தாரா சேப்டர் - 1 படத்தில், நாயகி ருக்மினி வசந்த்தின் பாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து, போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் நடிகை ருக்மினி வசந்த், கனகாவதி என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உர... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டில் பாக். கிரிக்கெட் வீரர் கைது!

இங்கிலாந்தில் பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தானின் ஷாஹீன்ஸ் அணியினர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிரு... மேலும் பார்க்க

தம்பி எல்வினுடன் ராகவா லாரன்ஸ்... புல்லட் டீசர்!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள புல்லட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி - 2 த... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது மாமன்!

நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுப... மேலும் பார்க்க

ஈட்டி எறிதல்: அன்னு ராணி வெற்றி

போலந்தில் நடைபெற்ற 8-ஆவது சா்வதேச வீஸ்லா மேனியக் நினைவு தடகள போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி சாம்பியன் ஆனாா்.இந்திய நேரப்படி, புதன்கிழமை இரவு நிறைவடைந்த இந்தப் போட்டியில் அவா் த... மேலும் பார்க்க

இந்தியாவை வென்றது சீனா

ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 69-100 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது. முதல் ஆட்டத்தில் ஜோா்டானிடம் வெற்றியை இழந்த இந்தியாவுக்கு... மேலும் பார்க்க