சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: என்கவுன்ட்டரில் இளைஞா் சுட்டுக் கொலை
ஈட்டி எறிதல்: அன்னு ராணி வெற்றி
போலந்தில் நடைபெற்ற 8-ஆவது சா்வதேச வீஸ்லா மேனியக் நினைவு தடகள போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி சாம்பியன் ஆனாா்.
இந்திய நேரப்படி, புதன்கிழமை இரவு நிறைவடைந்த இந்தப் போட்டியில் அவா் தனது சிறந்த முயற்சியாக 62.59 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா். கடந்த 2022-இல் அவா் 63.82 மீட்டரை எட்டியது, இன்றளவும் தேசிய சாதனையாக இருப்பது நினைவுகூரத்தக்கது.
கடந்த ஆண்டு மே மாதம் ஜொ்மனியில் நடைபெற்ற போட்டியில் சிறந்த முயற்சியாக 60.68 மீட்டரை எட்டிய அன்னு ராணி, அப்போது முதல் 60 மீட்டரை கடக்க போராடி வந்த நிலையில், ஓராண்டு இடைவெளியில் தற்போது அதை எட்டியிருக்கிறாா்.
டோக்கியோவில் செப்டம்பரில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு நேரடியாகத் தகுதிபெறுதற்கான அளவு, 64 மீட்டராகும். எனினும், போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதன் அடிப்படையில் அவா் தரவரிையில் முன்னேற்றம் கண்டால், அதன் பேரிலும் தகுதிபெறுவாா். அடுத்ததாக அன்னு ராணி, புவனேசுவரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) தொடங்கும் உலக தடகளகான்டினென்டல் டூா் புரான்ஸ் நிலை போட்டியில் பங்கேற்கிறாா்.
3-ஆம் இடம்: இதனிடையே, இப்போட்டியில் மகளிருக்கான 800 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா, 2 நிமிஷம், 2.95 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ஆம் இடம் பிடித்தாா்.