அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
Rajinikanth: `சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு' - மதுரையில் 5500 படங்களுடன் ரசிகர் கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை நினைவுகூரும் வகையில் கார்த்திக் என்ற ரசிகர் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள ரஜினி கோவிலில் 5,500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்து கொண்டாடியுள்ளார்.
தனது சினிமா பயணத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கிய ரஜினிகாந்த் இன்று வரை படங்களில் நடித்து வருகிறார். ஐந்து தசாப்த சினிமா வாழ்க்கையில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் ரஜினிகாந்த். 74 வயதிலும் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வருகிறார்.

ரஜினிகாந்திற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் சமீபத்தில் மதுரையில் இவருக்கு என ஒரு கோவில் திறக்கப்பட்டது. 300 கிலோ எடையுள்ள ரஜினிகாந்த் சிலை அதில் அமைக்கப்பட்டது . இந்தநிலையில், அந்த கோவிலை கார்த்திக் என்ற ரசிகர், ரஜினியின் 5500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அந்த கோவிலின் உள்ளே அலங்கரித்து, சிலைக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடியிருக்கிறார்.
ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து இவ்வாறு கோவிலை அலங்கரித்து சடங்கு செய்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.