செய்திகள் :

மீண்டும் சீரியல்; வைரலாகும் சம்பளம் விவரம்; "அதிக சம்பளத்திற்குக் காரணம் இருக்கு" - ஸ்மிருதி இரானி

post image

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார். அந்தத் தொடருக்காக அவர் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 

டி.வி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் பாஜக-வைச் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி. அரசியலில் களம் இறங்கிய இவர் பாஜக ஆட்சியில் 2014 முதல் 2024 வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும், தொழில், ஜவுளி துறை அமைச்சராகவும் இருந்தார்.

2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்தார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்து 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொடரில் நடிக்கிறார்.

இந்தத் தொடரின் முதல் சீசன் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில் ஸ்மிருதி இரானி நடித்த துளசி விராணி கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஸ்மிருதி இரானி ஒரு எபிசோடிற்கு 14 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் வெளியானது. இதுவரை டிவி சீரியலில் ஒரு எபிசோடிற்கு இவ்வளவு சம்பளம் யாரும் வாங்கியதில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்த ஸ்மிருதி இரானியிடம் 14 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இரானி, “நாம் ஒரு பென்ச் மார்க்கை செட் செய்து சீராக அதில் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும் போது நமக்கு அதிக ஊதியம் கொடுக்கலாம்தானே? இங்கிருக்கும் ஒவ்வொரு ஆண், பெண் நடிகர்களை விடவும் நான் அதிக சம்பளம் வாங்குகிறேன் எனில், அதற்கு என்னுடைய கடின உழைப்புதான் காரணம்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

நீங்கள் மட்டுமே நட்சத்திரமா அல்லது உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் நட்சத்திரமாக மாற்றும் திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு அந்தத் திறன் இருக்கிறது. என்னுடன் நடிப்பவர்களுக்குள் இருக்கும் நட்சத்திரத் தன்மையையும் என்னால் வெளிக்கொண்டு வர முடியும்.

துளசியுடன் நடித்த அமர் உபாத்யாய்க்கும் தனி மார்கெட் உருவானது இல்லையா? சூட்டிங் சமயங்களில் சக நடிகர்கள் என்னிடம் அரசியலைப் பற்றி அதிகம் பேசுவது நிறைவான உணர்வைத் தருகிறது. நாடாளுமன்றம் எப்படிச் செயல்படும் என்பதைக் கேட்டறிய நிறையப் பேர் ஆர்வமாக இருக்கின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

SRK: "ஷாருக்கான் என் காலேஜ் சீனியர்; ஆனாலும், அவருடைய அம்மாவாக நடித்தேன்" - நடிகை ஷீபா சத்தா

'பதாய் ஹோ', 'பதாய் டு' உட்படப் பல பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஷீபா சத்தா.இதைத் தாண்டி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களாகவும் இவர் நடித்திருக்கிறார்.இவர் 'ரயீஸ்', 'ஜீரோ' ஆகி... மேலும் பார்க்க

Kajol: `அதையே மீண்டும் ஏன் இந்தியில் பேச வேண்டும்?'- மராத்தி விழாவில் நடிகை கஜோல்

மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள்-2025 விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கஜோல் கலந்துகொண்டார். இந்திய சினிமாவுக்கு நடிகை கஜோல் செய்த பங்களிப்புக்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் ... மேலும் பார்க்க

Deepika Padukone: வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஏராளம். ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களில் தனி இடம் பிடிக்கின்றன. அந்த வகையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகி... மேலும் பார்க்க

``என்னுடைய கிரஷ்; அவருக்கு லெட்டார்லாம் போட்டேன்" - பாலிவுட் நடிகர் குறித்து எம்.பி மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் என்றால், தன்னுடைய ஆக்ரோஷமான பேச்சால் பெரும்பாலான எம்.பி-களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிவிடுவார். அதே நேரம் சமூக ஊடகங்களிலும், தனிப்... மேலும் பார்க்க

மாதம் ரூ.24.5 லட்சம் வாடகை; ஆமிர் கானும் குடியேறும் வாடகை வீடு - என்ன ஸ்பெஷல்?

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மும்பை இல்லம் இப்போது கூடுதல் மாடிகளுடன் நீட்டித்து புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ஷாருக்கான் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இதேபோன்று ந... மேலும் பார்க்க

Raanjhanaa Re-release: "படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது; என் ஆட்சேபனையை மீறி.!" - தனுஷ் காட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், கடந்த 2013-ல் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் `ராஞ்சனா' என்ற திரைப்படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரிலும் ரிலீஸானது.ஏ.ஆர... மேலும் பார்க்க