அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
சென்னையில் இருந்து ஆந்திரம் மாநிலத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் கே.பி. ஜெபாஸ்டியன் தலைமையிலான சிறப்பு குழுவினர் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எழும்பூர் ரயில்வே நடைமேடையில் 36 மூட்டைகளில் தமிழக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதையடுத்து அங்கு அமர்ந்திருந்த நபரை அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸார், 900 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர் .
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(35) எனத் தெரியவந்தது.
இவர் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை அதிக விலைக்கு விற்க ஆந்திரம் மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.