டிரம்ப் வரி விதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் புதின் - அஜீத் தோவல் சந்திப்பு!
புது தில்லி: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினையும், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்ஜி சோய்குவையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தனித் தனியாக சந்தித்திருப்பது முக்கியத்துவதாக பேசப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது தோவலுடன் ரஷியாவிற்கான இந்திய தூதர் வினய் குமார் உடனிருந்தார்.
முன்னதாக, தோவல் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்ஜி சோய்குவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய-ரஷிய இடையிலான ராஜதந்திர உறவு மற்றும் இருதரப்பு எரிசக்தித் துறை மேம்பாடு, பொருளாதர மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, அதிபா் புதினுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே முழு அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கான இந்தியப் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் "மிகவும் நியாயமான மற்றும் நிலையான உலக ஒழுங்கை" உருவாக்குவதில் இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருவதாக தோவல் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு அறிவிப்பு, ரஷியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை மேற்கோள் காட்டி மொத்த வரிகளை 50% ஆக உயர்த்தி அறிவித்ததை அடுத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.
உலகளாவிய மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் சீரமைப்பை இந்தச் சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேலும் "சிறப்பு மற்றும் கூட்டாண்மைக்கான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் சர்வதேச அரசியல் சூழலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முக்கியத்துவமாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
ஆண்டு இறுதியில் புதின் இந்தியா வருகை
இதற்கிடையே, இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரஷியா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா். புதின் வருகைக்கான தேதியை இரு தரப்பினரும் முன்கூட்டியே இறுதி செய்து வருவதாகவும், செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வருவதற்காதான தேதிகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இரு தரப்பினரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதனை உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு இறுதியில் புதின் இந்தியா வருவாா் எனத் தெரிகிறது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபா் புதினை தோவல் சந்தித்தார். புதின் தோவலை கைக்குலுக்கி வரவேற்றார்.
இருவரது சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தியாவுக்கு மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைவில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தோவல் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் ரஷியாவிற்கும் இடையே நீண்டகால உறவு இருப்பதாகவும், இந்த உறவை மதிப்பதாக தெரிவித்த தோவல், புதின் வருகை குறித்த தகவல் அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உச்சி மாநாடு அளவிலான சந்திப்புகள் எப்போதும் உறவுக்கான திருப்புமுனைப் புள்ளிகளாக அமைந்துள்ளன," என்று கூறினார்.
டிசம்பர் 2021-க்குப் பிறகு புதின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும், மேலும் மேற்கத்திய கூட்டாளிகளின் அழுத்தத்தை மீறி இந்தியா ரஷியாவுடன் வலுவான பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறை மேம்பாடு உறவுகளைத் தொடர்ந்து பராமரித்து வரும் நேரத்தில் இது சந்திப்பு நிகழ்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து மாஸ்கோவிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் முதல் சந்திப்பு இதுவாகும். கடைசியாக ஜூன் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தின் போது ரஷிய அதிகாரிகளைச் சந்தித்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் பிரதமா் மோடி இருமுறை ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.