அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
வாக்குத் திருட்டு: காங்கிரஸ் புலனாய்வு செய்தது எப்படி? விடியா வெளியிட்ட ராகுல்
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், காங்கிரஸ் எவ்வாறு புலனாய்வு செய்தது என்பது குறித்த விடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மக்களிடையே பிரசாரங்களுக்குச் செல்லும்போது, அங்கு மக்களிடையே இருக்கும் எண்ணங்களை நன்கு உணர முடிந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதற்கு நேர் மாறான முடிவுகள் வந்தது. அதனால்தான் தேர்தல் நடக்கும் விதத்தில் எங்களுக்கு சந்தேகமே எழுந்தது என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
மத்திய அரசுக்கு ஆதரவாக, தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டுக்கு துணை போயிருப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல், பவேறு ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை, ஒரு விடியோவை ராகுல் வெளியிட்டிருக்கிறார். பல்வேறு மாநிலங்களில், எவ்வாறு வாக்குத் திருட்டு நடந்தது என்பதற்கு பதிலளிக்கும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக நடந்த மோசடி என்றும் ராகுல் அந்த விடியோவில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோசடியில் ஈடுபடுபவர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும், நேரம் மாறும், குற்றம் செய்தவர்கள் தண்டனையை சந்தித்தே ஆக வேண்டும் என்றார்.
அது மட்டுமல்ல, மகாராஷ்டிர தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலின்போது, ஏராளமான புது வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே பாஜகவுக்கு வாக்களித்திருந்ததும் சந்தேகத்தை எழுப்பியது.
வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை காங்கிரஸ் கேட்டபோது, அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதன் மூலம் முறைகேடு நடப்பது உறுதி செய்யப்பட்டது. பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா?