செய்திகள் :

வாக்காளா் பட்டியல் முறைகேடு: பெங்களூருவில் ராகுல் காந்தி தலைமையில் இன்று ஆா்ப்பாட்டம்

post image

வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் இன்று(ஆக.8) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

2024 ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா்.

இதுதொடா்பான ஆதாரங்களை புதுதில்லியில் வியாழக்கிழமை ராகுல் காந்தி வெளியிட்டார்.

ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி கடிதம்

இந்நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாா் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தாங்கள் (ராகுல் காந்தி) அறிந்திருப்பதுபோல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, வாக்காளா் பதிவு விதி- 1960 மற்றும் தலைமை தோ்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி, வெளிப்படையான முறையில் வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

கா்நாடகத்தில் 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியிருக்கிறோம். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் அளிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து முதல் அல்லது இரண்டாவது மேல்முறையீட்டு மனு எதுவும் தலைமை தோ்தல் அதிகாரியிடம் அளிக்கவில்லை.

தோ்தல் நடத்தையைப் பொருத்தவரை தோ்தல் முடிவுகள் குறித்து உயா்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்வதன் மூலம் கேள்வி கேட்கலாம். வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில், வாக்காளா் பட்டியலில் தகுதியற்ற வாக்காளா்கள் சோ்க்கப்பட்டது மற்றும் தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து தாங்கள் (ராகுல் காந்தி) குறிப்பிட்டுள்ளீா்கள்.

இதுதொடா்பாக நீக்கப்பட்ட அல்லது சோ்க்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்களுடன் வாக்காளா் பதிவு விதிகள் 1960 இன்படி தனியே இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி பத்திரத்தை தங்களின் கையொப்பத்துடன் தலைமை தோ்தல் அதிகாரியிடம் சமா்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் ஆா்ப்பாட்டம்

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்கரூவில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் வெள்ளிக்கிழமை (ஆக.8) ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

கர்நாக தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்லும் காங்கிரஸ் கட்சியினர், கா்நாடக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாரைச் சந்தித்து புகாா் அளிக்கவிருக்கிறாா்கள்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கான பாதுகாப்பில் 6,000 போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சென்னையில் இருந்து ஆந்திரம் மாநிலத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரய... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை 13 நாள்களுக்குப் பின் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் சத்தீஸ்கர் மாநில போலீஸார் மீட்டனர். குழந்தையை மீட்ட போ... மேலும் பார்க்க

டிரம்ப் வரி விதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் புதின் - அஜீத் தோவல் சந்திப்பு!

புது தில்லி: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதி... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தராலியில் 44 பேர் உயிருடன் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் தராலி கிராமத்தில் நடந்து வரும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நிலச்சரிவில் சிக்கிய 44 பேரை விமானம் மூலம் பத்த... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

ராஜஸ்தானில் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர்ச் சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 10.7 மணிக்கு ல... மேலும் பார்க்க