Tuvalu: மெதுவாக கடலில் மூழ்கும் தீவு; இடம்பெயரும் மக்கள் - காலநிலை மாற்றத்தால் க...
ED: `தண்டனை இல்லாமலேயே சிறையில் அடைக்கும் அமலாக்கத்துறை’ - உச்ச நீதிமன்றம் காட்டமான விமர்சனம்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இது பா.ஜ.க தலைமையிலான அரசின் அப்பட்டமான பழிவாங்கல். அமலாக்க இயக்குநரகம் பா.ஜ.க-வின் கைப்பாவையாக இருக்கிறது' என எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த நிலையில், பூஷண் ஸ்டீல்-ஜேஎஸ்டபிள்யூ வழக்கு நேற்று இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ``வெறும் குற்றச்சாட்டு என்பதின் அடிப்படையில், தண்டனை இல்லாமலே பல ஆண்டுகளாக மக்களை சிறையில் அடைப்பதில் அமலாக்க இயக்குநரகம் வெற்றிகரமாக செயல்படுகிறது' எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு (PMLA) எதிரான மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி உஜ்ஜல் பூயான் தலைமையிலான அமர்வில், நீதிபதி உஜ்ஜல் பூயான்,``நீங்கள் (அமலாக்க இயக்குநரகம்) பதிவு செய்துள்ள சுமார் 400 ECIR ECIR (அமலாக்கம் வழக்கு தகவல் அறிக்கை)களில், 10-க்கும் குறைவானவர்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். அமலாக்கத்துறை அதன் விசாரணை முறைகளை மேம்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டு இறுதியாக விடுவிக்கப்படுகின்றனர். சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கும் சட்டத்தை மீறுபவர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. அமலாக்கத்துறை வழக்குகளில் ஏற்படும் தாமதத்திற்கு சட்டத்தையோ அல்லது அரசியலமைப்பையோ குறை கூற முடியாது" எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.