செய்திகள் :

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

post image

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்திருந்தார்.

நேரில் ஆஜரான அன்புமணியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ் தரப்பு விளக்கத்தையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிந்தார். பின்னர் அன்புமணி நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் பொதுக்குழுவுக்கு தடை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நாளை திட்டமிட்டபடி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Madras High Court has stated that there is no objection to the general body meeting being held by Anbumani.

இதையும் படிக்க |அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி! அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்!

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி: பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைப... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதி !

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார். ஏற்கெனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழாவில் அவர் ஆற்றிய உரையில், இந்த... மேலும் பார்க்க

அன்புமணி - ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்தது. நேரில் ஆஜரான அன்புமணியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ் தரப்பு விளக்கத்தையும் ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவ... மேலும் பார்க்க