`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழு...
தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,375க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.75,000க்கு விற்பனையாகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,745க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.61,960 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.