செய்திகள் :

கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால்.. சூலூர் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

post image

கோவை: கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் கோவை மாவட்டம் சூலூர் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

கொலை வழக்கை சரியாக விசாரணை மேற்கொள்ளாததால் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை ஒரு கும்பல் சென்னையில் கொலை செய்துவிட்டு, காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் கல்லைக்கட்டி வீசிவிட்டுச் சென்றனர்.

விசாரணையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

அந்த உடல் எலும்புக் கூடாக காணப்பட்டது. இந்தக் கொலையை செய்ததாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அதன் பின்னர்தான் கொலை விவகாரம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் செட்டிபாளையம் காவல் நிலையை ஆய்வாளராக பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இந்தக் கொலை வழக்கில் முருகப்பெருமாள் சரண் அடைந்தாலும், அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிகிறது. இந்தக் கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நியூட்டன், பெனிட்டோ ஆகியோர் செய்து உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனே அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.

கொலை வழக்கில் தொடர்பு இல்லாத முருகப்பெருமாள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தாமல் அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்த விவகாரம் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இது குறித்து டி.ஐ.ஜி. சசி மோகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் முருகப்பெருமாள் குறித்து காவல் ஆய்வாளர் லெனின் சரியாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டார். கொலை வழக்கை சரியாக விசாரிக்காத ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடக்கம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன மின்சார பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.சென்னை பெரும்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட மின்சார பேருந்து பணிமனையை இன்று காலை துணை முதல்வர் ... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் எம்.எட். சேர்க்கை: ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம்!

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஆக. 11) முதல் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.2025-... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க அவகாசம்

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா: ஓடுதளத்தில் மற்றொரு விமானம்! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டபோது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றுகொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் தில்லிக... மேலும் பார்க்க

கோவையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை!

கோவையில், காட்டு யானையொன்று நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்தி, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சூறையாடியது.கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது அறி... மேலும் பார்க்க

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்... மேலும் பார்க்க