'கூலி'-க்கு தொடக்கப் புள்ளி வைத்த அனிருத் வீட்டு ரஜினி பெயின்டிங் - அனிருத் பகிர...
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வார்டில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், அந்த வார்டு முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அப்போது வார்டில் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் நிகழவில்லை.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரைத் தளத்தில் ஹெச்டியு என்றழைக்கப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஒரு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாறுவதற்கு முன்பு இந்த வார்டில் வைத்திருந்து, நோயாளரின் தீவிரத் தன்மைக் குறித்து முடிவு செய்து பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள்.
இந்த வார்டில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வார்டுக்குள் இருந்து அதிகளவில் புகை வெளியேறுவதைக் கண்ட மருத்துவமனைப் பணியாளர்கள் தீயணைப்புத் துறைக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தும், வார்டிலுள்ள மருத்துவக் கருவிகள், படுக்கைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
நல்வாய்ப்பாக அந்த வார்டில் நோயாளர்களோ, மருத்துவப் பணியார்களோ அப்போது இல்லை.
மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். கலைவாணி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிட்டனர்.

மருத்துவ உபகரணங்களில் இருந்து ஏற்பட்ட மின்சாரக் கசிவு இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.