ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணி...
எம்.பி.க்களுக்கு 25 மாடிக் குடியிருப்புகளை திறந்துவைத்தார் மோடி!
தில்லி பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
4 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என ஆறுகளின் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய மோடி, “புதிய குடியிருப்புகளில் எம்பிக்கள் எந்தப் பிரச்னையும் எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களின் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த குடியிருப்பில் 180க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஒன்றாக வாழ்வார்கள்.
வாடகை கட்டடங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கும் ரூ. 1,500 கோடி செலவாகும். இந்த செலவுகளைக் குறைப்பதற்காக புதிய கட்டடங்களை கட்டத் தொடங்குனோம். 2014 முதல் இதுவரை 350 எம்பிக்கள் குடியிருப்புகள் கட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, குடியிருப்புக் கட்டடப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளார்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நவீன வசதிகள்: 25 அடுக்குமாடிகளைக் கொண்ட நான்கு தொகுதிளாகக் கட்டப்பட்டுள்ள இந்த இடத்தில் 184 எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 5,000 சதுர அடி அளவுள்ளவை.
பெரிய மற்றும் விசாலமான வடிவமைப்புடன் ஐந்து படுக்கை அறைகள், ஒரு பெரிய உணவருந்தும் வசதியுடன் கூடிய சமையலறை, விருந்தினா் உபசரிப்பு அறை, எம்.பி. முகாம் அலுவலக அறை, விருந்தினா் தங்கும் அறை ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளன.
சுமாா் 200 வாகனங்களை வளாகத்தினுள்ளே நிறுத்தவும் கீழ்தளத்தில் சுமாா் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் இங்கு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுள்ளேயே உடற்பயிற்சிக்கூடம், நடைப்பயிற்சிக்காக சிறிய வசதிகளுடன் கூடிய பூங்கா போன்றவையும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.