ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணி...
உடுமலைப்பேட்டை: 1 கி.மீ. நடந்து வந்து மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை : உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் 1 கி.மீ. தொலைவு வரை நடந்து வந்து மக்களை சந்தித்தார்.
உடுமலைப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கியும் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பே, வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து வந்தார்.
வழியில் இருபுறமும் தன்னைக் காண காத்திருந்த மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார், அப்போது சில இடங்களில் பெண்கள் முதல்வர் காலில் விழுந்து வணங்கினர்.