செய்திகள் :

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜர்!

post image

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா டகுபதி திங்கள்கிழமை ஆஜரானார்.

சட்டவிரோதமாக இணையத்தில் பந்தயம் கட்டி விளையாடுவதற்கான பல சூதாட்ட செயலிகள், முறைகேடான வழியில் கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பான பணமுறைகேடு வழக்கில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில், வெவ்வேறு தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக நடிகா்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோருக்கு கடந்த வாரம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஏற்கெனவே, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா நேரில் ஆஜராகி அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதனிடையே, கடந்த ஜூலை 23 ஆம் தேதி ராணா டகுபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. மேலும், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அவரது சாா்பில் கோரிக்கை விடுக்ககப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இரண்டாவது சம்மனை ஏற்று, ஹைதராபாத் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை ராணா ஆஜராகியுள்ளார்.

Actor Rana Daggubati appeared before the Enforcement Directorate on Monday in connection with an illegal online gambling case.

இதையும் படிக்க : வாக்குத் திருட்டு: தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி தடுத்து நிறுத்தம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்ன... மேலும் பார்க்க

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில... மேலும் பார்க்க

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்... மேலும் பார்க்க

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதனை தகர்ப்போம் என்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மேலும், காஷ்மீரை பாகிஸ்த... மேலும் பார்க்க