செய்திகள் :

`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழுப்பும் சஞ்சய் ராவத்

post image

சமீபத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக ராஜ்ய சபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தாப் தன்கர் விவாதத்திற்கு ஏற்றதால் மத்திய அரசு அவர் மீது கடும் அதிருப்தியடைந்தது என்ற தகவல் வெளியானது.

இந்தநிலையில் தான் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜெகதீப் தன்கர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் எந்த வித பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி இருக்கிறார். சஞ்ய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''ஜெகதீப் தன்கரிடம் கடைசியாக ஜூலை 21-ம் தேதி பேசினேன். அன்று ராஜ்ய சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நல்ல உடல் நலத்துடன் இருந்தார். ஆனால் அன்று மாலை 6 மணிக்கு அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் ராஜினாமா செய்த நாளிலிருந்து, அவரை எங்கேயும் காண முடியவில்லை. அவர் எங்கே? அவரது உடல்நிலை என்ன? அவர் யாருடன் இருக்கிறார்? அவர் எங்கே தங்கியிருக்கிறார்? அவர் நலமாக இருக்கிறாரா? அவர் உண்மையில் இருக்கிறாரா?" என்று ராவத் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ரஷ்யா, சீனாவில் இருப்பது போன்ற ஒரு நடைமுறை..!

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''தன்கர் இல்லாதது குறித்து தனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாட்டின் துணை ஜனாதிபதி இப்படி மறைந்துவிட்டார், அவரைப் பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை என்றால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கு கவலை அளிக்கும் விஷயம் ஆகும். ரஷ்யா, சீனாவில் இருப்பது போன்ற ஒரு நடைமுறை இந்தியாவில் தொடங்கியிருந்தால், ராகுல் காந்தியும் அவரது கூட்டணி கட்சி தலைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Article 142 - ஜக்தீப் தன்கர்
ஜக்தீப் தன்கர்

எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் ரஷ்யா மற்றும் சீனாவில் காணாமல் போகும் நிலை இருக்கிறது. அது போன்ற ஒரு நடைமுறை இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா?. உத்தவ் தாக்கரே டெல்லிக்கு வந்தபோது, கபில் சிபல் அவரைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து நாங்கள் அவரிடம் விவாதித்தோம். எனவே ஜெகதீப் தன்கரை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்வது குறித்து எங்களது கட்சி பரிசீலித்து வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்..

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலினின் உடுமலைப்பேட்டை பயணம்; நலத்திட்ட உதவிகள் வழங்கினார் | Photo Album

நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம் உதவி வழங்கினார்நலத்திட்டம்... மேலும் பார்க்க

'சாதிய ஆதிக்க திமிரோடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகிறார்!' - போராட்டக்குழு கடும் குற்றச்சாட்டு

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையின் மண்டலங்கள் 5, 6 இரண்டையும் தனியார்மயப்படுத்... மேலும் பார்க்க

SIR: வாக்குத் திருட்டு; `தேர்தல் ஆணைய முற்றுகைப் போராட்டம்' - 300க்கும் மேற்பட்ட எம்.பிகள் பேரணி?

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஊடகங்களிடம் பேசினார். மேலும், பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வ... மேலும் பார்க்க

US Tarrif: `நண்பனாக இருப்பது உயிரைக் கொல்லும்? - அமெரிக்கா சொல்லும் பாடம்' - இரா.சிந்தன்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)மாநிலக்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்... மேலும் பார்க்க

PMK: `நான் சொல்வது தான் நடக்கும்' - மகன் அன்புமணிக்கு பதிலளித்த தந்தை ராமதாஸ் - என்னப் பேசினார்?

கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் நீட்சியாக இருவரும் தனித் தனிப் பொதுக்கூட்டம் நடத்துவதாக அற... மேலும் பார்க்க

SIR:``பீகார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கு" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணியை மேற்கொண்டு வருகிறது. பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாடு எனத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு மாநி... மேலும் பார்க்க