செய்திகள் :

மும்பை: வீட்டை விட்டு ஓடி வந்த 12 வயது வங்கதேச சிறுமி; 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அவலம்

post image

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் வருகின்றனர். அவர்கள் மும்பை போன்ற நகரங்களில் கூலி வேலை செய்கின்றனர்.

இதே போன்று பங்களாதேஷில் வேலை வாங்கித்தருவதாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் தகவல் கிடைத்தது.

உடனே போலீஸார் அங்கு ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 12 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது அவரது சொந்த நாடு பங்களாதேஷ் என்று தெரிய வந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அப்பெண்ணை இந்நிலைக்குத் தள்ளியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது, அவரைக் கடத்தல்காரர்கள் குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்திற்கு அழைத்து சென்றதாகவும், அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும், அப்போது 3 மாதத்தில் 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொண்டு நிறுவனத்தில் நிர்வாகி ஆபிரகாம் கூறுகையில், ''மீட்கப்பட்ட சிறுமி பள்ளியில் படித்தபோது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் பெற்றோருக்குப் பயந்து தனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். அப்பெண் சிறுமியை இந்தியாவிற்குள் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 200 பேரைக் கைது செய்யவேண்டும். வாஷி மற்றும் பேலாப்பூர் பகுதியில் மைனர் பெண்களைச் சிலர் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். கிராமங்களில் இருந்து குழந்தைகளைத் திருடி மைனர் சிறுமிகளிடம் கொடுத்து பிச்சை எடுக்க வைக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மைனர் பெண்கள் விரைவில் பருவம் அடைய ஹோர்மோன் ஊசி போட்டு பருவம் அடைந்ததும், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் நிகேத் கெளஷிக் கூறுகையில், ''இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

கோவை குனியமுத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் 39 வயது பெண் திருமணமாகி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்களின் காரை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்துள்ளனர். ட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: புலம்பெயர் தொழிலாளர் கொலை வழக்கில் திருப்பம்; மேற்கு வங்க இளைஞர் கைதின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டறியப்பட்டது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறையினர் சம்பவ இட... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புது... மேலும் பார்க்க

புதுச்சேரி: விடிய விடிய போதை நடனம்… அத்துமீறும் `ரெஸ்டோ’ பார்கள்… அமைதி காக்கும் காவல், கலால் துறை

கரன்சிகளால் காற்றில் பறக்கவிடப்படும் விதிகள்சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதனால்தான் மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநி... மேலும் பார்க்க

`பிரிந்த காதலை சேர்க்க' - பிளாக் மேஜிக் இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ரூ.16 லட்சத்தை இழந்த மும்பை பெண்

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக ஊடகங்கள், முகநூல் பக்கங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் இப்போது உறவுகள் பேசிக்கொள்வதை விட போனில் தான் அதிகமான நேரம் மூழ்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பிறந்த நாள் மது விருந்தில் தகராறு - மாணவரை `ரெஸ்டோ' பார் ஊழியர் கொலை செய்த பின்னணி

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க