'கூலி'-க்கு தொடக்கப் புள்ளி வைத்த அனிருத் வீட்டு ரஜினி பெயின்டிங் - அனிருத் பகிர...
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.
ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் யாத்திரைப் பணியை முடித்துவிட்டு ஜம்முவுக்குச் புறப்பட்டு சென்ற மூன்று துணை ஆய்வாளர்கள் லஸ்ஜன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த போலீஸ் அதிகாரிகள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், அவர்களில் இருவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். பலியானவர்கள் சச்சின் வர்மா மற்றும் சுபம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு
அதேசமயம் காயமடைந்த அதிகாரி மஸ்தான் சிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.