`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழு...
தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிய பாஜக: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
புது தில்லி: தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்திருப்பதாவது, தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பை திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
எனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, இந்த தீவிர மோசடியை அம்பலப்படுத்தியிருக்கிறார். ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியினர், நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாகச் சென்று கோரிக்கையை வலியுறுத்தவிருக்கிறோம். ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு திமுக தோளோடு தோள் நிற்கும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் கணினிகள் மூலம் படிக்கக்கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்,
அரசியல் ரீதியாக வாக்காளர் பட்டியல்களில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மற்றும் நமது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட நாசவேலை குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.
மத்தியில் ஆளும் பாஜக, இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப் பகலில் கொள்ளையடிப்பதை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல்களில் போலியான வாக்காளர்களை சேர்த்திருப்பதாகவும், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், வாக்குத் திருட்டு என்ற பெயரில், மோசடியை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.