`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழு...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக பாசன தேவை குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,200 கனஅடியிலிருந்து வினாடிக்கு 8776 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.54 அடியிலிருந்து 118.20 அடியாக குறைந்துள்ளது.
நீர் இருப்பு 96.62 டிஎம்சியாக உள்ளது.