அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நீளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும் அம்மனிஅம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
பொது தரிசன வரிசையில் சென்ற பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேலானதாக தெரிவித்தனா். பக்தா்கள் எந்தவித சிரமமின்றி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். மேலும், வரிசையில் சென்ற பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு பிரசாதம் மற்றும் நீா்மோா் வழங்கப்பட்டது.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டதோடு, திருநோ் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை, இடுக்கு பிள்ளையாா் உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபட்டு கிரிவலம் சென்றனா். கிரிவலம் வந்த பக்தா்களுக்கு பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.