செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "பணி நிரந்தரம்தான கேட்கிறாங்க; அதில் என்ன பிரச்னை?' - சின்மயி கேள்வி

post image

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

சேகர் பாபு
சேகர் பாபு

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீமான், கி.விரமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி தண்ணீரும், பிஸ்கட்டும் வழங்கினார்.

தற்போது இப்போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் சின்மயி, "கடும் வெயில்ல போராடுறாங்க, அதனாலதான் என்னால முடிஞ்ச உதவியாக அவங்களுக்குத் தண்ணீரும், பிஸ்கட்டும் கொடுத்தேன். பணி நிரந்தரம் வேண்டும்னுதான கேட்குறாங்க, அதைக் கொடுப்பதில் என்ன பிரச்னை அரசுக்கு.

சின்மயி

குறைந்தபட்சம் போராடுபவர்களுக்கு ஆதரவாகக் குரலாவது கொடுக்கலாம்

போராடுறதுல நிறையபேர் கணவன் துணையில்லாமல் தனியாக குடும்பத்தை நடத்தும் பெண்கள். பணி நிரந்தரம் செய்யப்பட்டால் அவர்கள் வாழ்வு கொஞ்சம் நிலையாக இருக்கும்.

களத்தில் நிற்க முடியவில்லை என்றாலும், வெளியில் இருந்து அவர்களுக்காகக் குரல் கொடுத்தாவது ஆதரவு கொடுக்கலாம். அவர்களின் கோரிக்கைகள் நியயமானது. அரசு அதை நிறைவேற்றணும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Coolie: ``4-வது முறையாக இணைந்திருக்கிறோம்; இந்த முறையும் தெரிக்கவிடபோறோம்'' - லோகேஷ் கனகராஜ்

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கூலி' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்குவருகிறது. நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சோபின், சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

``பையன் காலேஜ் போறான்; நான் +2 பரீட்சைக்கு படிக்கிறேன் சார்" – கல்வி குறித்து நெகிழும் முத்துக்காளை

இரு தினங்களுக்கு முன் மகன் வாசன் முரளி கல்லூரியில் நுழையும் முதல் நாளில், வகுப்பு வரை கூடவே சென்று அனுப்பி வைத்து விட்டு வந்திருக்கிறார் நடிகர் முத்துக்காளை.‘பையன் ஸ்கூலுக்கா போறான், கொண்டு போய் விடறத... மேலும் பார்க்க

Simran: `நான் அவரின் தீவிரமான ரசிகை; அவர் எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன்' - ரஜினி குறித்து சிம்ரன்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சிம்ரன், " சிம்ரன் 'கூலி' படத்தின் டிரயிலரைப் பார்த்தேன்.... மேலும் பார்க்க

அஜித் காலில் விழுந்த ஷாலினி: ``வீட்டுல போய் நான் விழணும்'' - நட்சத்திர தம்பதியின் க்யூட் மொமண்ட்!

நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. நடிகை ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவின் படி, நட்சத்திர தம்பதி வரலட்சுமி பூஜையில் கலந்துகொண்டத... மேலும் பார்க்க

Coolie: ``நீங்கள் உருவாக்கிய மாயாஜாலம்" - கூலி படத்தின் ஒளிப்பதிவாளரை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்

கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ஒளிப்பதிவிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு சிறந்த ஒளிப்பதிவுக்காக ஒள... மேலும் பார்க்க