தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
Gaza: 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்து கொன்ற இஸ்ரேல் ராணுவம்; வலுக்கும் கண்டனம்; என்ன நடந்தது?
ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின் கொடுமைகள் மேலும் மேலும் அதிகரித்துகொண்டே இருக்கின்றன.
தற்போது இந்தப் போரில் ஐந்து பத்திரிகைளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே ஊடகக் கூடாரம் உள்ளது.
அந்தக் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட ஐந்து அல் ஜசீரா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் அறிக்கையும், அல் ஜசீராவின் பதிலும்
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின் ஆயுதப் பிரிவின் ஒரு பிரிவை அல்-ஷரீஃப் வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிக்கையை அல் ஜசீரா நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.
யார் யார் இறந்தனர்?
இந்தத் தாக்குதலில் அனஸ் அல்-ஷரீஃப் உடன் அல் ஜசீரா நிருபர் முகமது க்ரீகே, ஒளிப்பதிவாளர்கள் இப்ராஹிம் ஜாஹர் மற்றும் மொமென் அலிவா மற்றும் அவர்களின் உதவியாளர் முகமது நௌஃபல் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் அத்தனை தாக்குதலையும் வெளியிட்டு வந்தது அல் ஜசீரா பத்திரிகை நிறுவனம். அதற்குக் களத்தில் இருந்த இவர்கள்தான் முக்கிய காரணம்.
அச்சுறுத்தல்
காசாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தெரிந்துகொள்ள கூடாது என்றுதான் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது என்று பெரும் கண்டனம் எழுந்து வருகிறது.
இந்தக் கொலைகள் பத்திரிகை சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.