தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
Trump: ''தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க" - ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார்.
'விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்' என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பக்கம், இந்த வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா உடன் நடத்தி வருகிறது இந்திய அரசு.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு இந்த வரிக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜ்நாத் சிங் பேசியது என்ன?
மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராஜ்நாத் சிங், "சிலரால் இந்தியாவின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை அவர்கள் நல்லவிதமாக எடுத்துக்கொள்ளவில்லை.
அவர்கள், 'நான்தான் அனைவருக்கு பாஸ்... இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது' என்பதைப் போல நடந்துகொள்கிறார்கள்.
அதனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது, மிக அதிக விலையாக இருக்க வேண்டும் என்பதற்கான வேலைகளைச் செய்கிறார்கள்.
ஆனால், இந்தியா தற்போது வளர்ந்துகொண்டிருக்கும் வேகத்திற்கு, எந்தச் சக்தியாலும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்கிற உறுதியை என்னால் அளிக்க முடியும்" என்று பேசியுள்ளார்.