தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
சென்னையில் தக்காளி விலை தொடர் உயர்வு
சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-ஆக உயா்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென உயா்ந்து கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது.
பின்னா், வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் குறைந்தது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னா், திங்கள்கிமை மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.40 வரை விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, திங்கள்கிழமை நிலவரப்படி ரூ.60-க்கு விற்பனையாகிறது.
இது சில்லறை விலையில், ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.