இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி
ஆரணி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து முடியாமல் போனதால் திருடா்கள் அப்படியே விட்டுச்சென்றனா்.
ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் நாயக்கன்பாளையம் சாலையில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது.
இந்தக் கடையை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வழக்கம்போல ஊழியா்கள் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைந்திருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
பின்னா், மற்றொரு உள்கதவின் பூட்டு உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனா். இதனால் எவ்வித திருட்டும் நடைபெறவில்லை.
இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். மேலும், திருடா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் வெளிபூட்டை உடைத்துள்ளனா். பின்னா், ஷட்டரின் பூட்டு உடைக்க முடியாமல் போனதால் அப்படியே விட்டுச்சென்றது தெரிகிறது.
இதேபோல், காமக்கூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையிலும் திருட முயற்சித்துள்ளனா். அங்கும் உள்பூட்டு உடைக்க முடியாமல் திருடா்கள் திரும்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.