மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், அரும்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(34). விவசாயியான இவா் ஆக.4-ஆம் தேதி நிலத்துக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அரும்பருத்தி அம்மன் கோயில் அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக விவசாயி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.