செய்திகள் :

Coolie: ``4-வது முறையாக இணைந்திருக்கிறோம்; இந்த முறையும் தெரிக்கவிடபோறோம்'' - லோகேஷ் கனகராஜ்

post image

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கூலி' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சோபின், சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' இப்போது 'கூலி' என அனிருத் - லோகேஷ் இருவரும் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இவையெல்லாம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன.

அனிருத், லோகேஷ்.

படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால், பட புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் லோகேஷ். நேர்காணல்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, தினமும் படம் குறித்த சமூக வலைதள பதிவுகள் என 360 டிகிரியில் புரோமோஷன் செய்துகொண்டிருக்கிறார்.

படத்தின் பின்னணி இசை உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவுற்ற நிலையில் அனிருத்துடன் நான்காவது முறையாக இணைந்திருப்பது பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், "நாங்கள் இருவரும் எங்கள் பயணத்தை ஒன்றாகத் தொடங்கி, நான்காவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் இருவரும் சேர்ந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்திருக்கிறது. இம்முறையும் எங்கள் இருவரின் கூட்டணியும் தெரிக்கவிடும். என் இன்னொரு தாயின் மகன், என் சகோதரன் அனிருத்திற்கு எனது மனநிறைந்த அன்புகள்." என்று நெகிழ்ச்சியாக அன்பையும் நன்றியையும் தெரிவித்திருக்கிறார் லோகேஷ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``பையன் காலேஜ் போறான்; நான் +2 பரீட்சைக்கு படிக்கிறேன் சார்" – கல்வி குறித்து நெகிழும் முத்துக்காளை

இரு தினங்களுக்கு முன் மகன் வாசன் முரளி கல்லூரியில் நுழையும் முதல் நாளில், வகுப்பு வரை கூடவே சென்று அனுப்பி வைத்து விட்டு வந்திருக்கிறார் நடிகர் முத்துக்காளை.‘பையன் ஸ்கூலுக்கா போறான், கொண்டு போய் விடறத... மேலும் பார்க்க

Simran: `நான் அவரின் தீவிரமான ரசிகை; அவர் எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன்' - ரஜினி குறித்து சிம்ரன்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சிம்ரன், " சிம்ரன் 'கூலி' படத்தின் டிரயிலரைப் பார்த்தேன்.... மேலும் பார்க்க

அஜித் காலில் விழுந்த ஷாலினி: ``வீட்டுல போய் நான் விழணும்'' - நட்சத்திர தம்பதியின் க்யூட் மொமண்ட்!

நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. நடிகை ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவின் படி, நட்சத்திர தம்பதி வரலட்சுமி பூஜையில் கலந்துகொண்டத... மேலும் பார்க்க

Coolie: ``நீங்கள் உருவாக்கிய மாயாஜாலம்" - கூலி படத்தின் ஒளிப்பதிவாளரை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்

கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ஒளிப்பதிவிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு சிறந்த ஒளிப்பதிவுக்காக ஒள... மேலும் பார்க்க

Captain Prabhakaran: `எனக்காக விஜயகாந்த் சார் மூணு மணிநேரம் ஷூட்டிங்கை நிறுத்தினார்’ - சிங்கம்புலி

மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது படம் 'கேப்டன் பிரபாகரன்' ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதையொட்டி, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க