சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு
காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.
ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்துவதல்ல, காஸாவை சுதந்திரப்படுத்துவதே இலக்காகும்” என்று குறிப்பிட்டார்.

“காஸாவில் மக்கள் பலி, அழிவு, உதவிப்பொருள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஹமாஸ் படைக்குழுவே காரணம்.
ஹமாஸை வீழ்த்துவதில் நிறைவு அடைவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழி இல்லை.
காஸாவில் படைகளை விலக்கிக்கொள்ளுதல், இஸ்ரேல் மக்கள் அல்லாதவொரு பொது நிர்வாகத்தை அங்கு பொறுப்பேற்கச் செய்தல் நடக்கும். காஸாவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு குறுகிய கால அட்டவணை தயாராக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!