செய்திகள் :

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

post image

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸா சிட்டி முழுவதையும் படை பலத்தால் ஆக்கிரமித்து இச்ரேல் கட்டுப்பாட்டுக்குல் இருக்கச் செய்ய திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் முக்கிய அமைச்சர்கள அல்விலான கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று(ஆக. 10) அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பர்க்கப்படுகிறது.

இத்திட்டத்தால் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று ராணுவமும் எச்சரிக்கிறது. இந்தநிலையில், இதற்கு பொது வெளியில் எதிர்ப்பலை கடுமையாக வீசுகிறது. ஏற்கெனவே வெளிநாடுகளில் இஸ்ரேலில் காஸா ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டிலும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் தலைநகர் டெல் அவிவ் வீதிகளில் திரண்டு சனிக்கிழமை(ஆக. 9) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் சுமார் 1,00,000 மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களில் அங்கு எஞ்சியுள்ள 50 பேரையும் மீட்டுக்கொண்டுவர அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ள பல பிணைக்கைதிகள் இஸ்ரேல் - ஜமாஸ் தலைமைக்கு இடையிலான தூதரக ரிதியிலான பேச்சுவார்த்தையால் நடைபெற்ற முன்னேற்றங்களாகும். இந்தநிலையில், அதே பாணியில், சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிணைக் கைதிகளி மீட்க கோரிக்கை வலுத்துள்ளது. இதற்காக காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சண்டையை மேலும் தீவிரப்படுத்தாமல் நெதன்யாகுவை வலியுறுத்த அமெரிக்க் அதிபர் டிரம்ப் நடவடைகை எர்டுக்கவும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காஸாவில் தொடர் சண்டையில் இதுவரை மரணமடைந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 61,000-ஐ கடந்துவிட்டதாக காஸா சுகாதார அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்களும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் மக்களில் ஒருபகுதியினரிடம் இருந்ததை கவனிக்க முடிந்தது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

Netanyahu's plan to seize Gaza City: protesters took to the streets of Tel Aviv on Saturday

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான மு... மேலும் பார்க்க

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்டு இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு பதிவிட்ட யுஇஎஃப்ஏவை பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா விமர்சித்துள்ளார். தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா். ரஷியா... மேலும் பார்க்க

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச... மேலும் பார்க்க

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வ... மேலும் பார்க்க