செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை!

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க |7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

The Chennai Meteorological Department has announced that there is a possibility of rain in 25 districts in Tamil Nadu for the next 3 hours.

கோவையில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம்!

கோவை விமான நிலையம் முதல் அவிநாசி வரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை செல்கிறார்.கோவை மற்றும் திருப்பூர், உடுமலைப்பேட்டையில் நாளை காலை அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவிருக்கிறார். மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர... மேலும் பார்க்க

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழ... மேலும் பார்க்க

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் முதல்முறையாக 11 தாழ்தளப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் க... மேலும் பார்க்க