உபி.: கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலி
உத்தரப் பிரதேசத்தில் கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், சர்காதல் கிராமத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழ கிணற்றில் பம்ப் பெல்ட்டை சரிசெய்ய மூன்று சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமை இறங்கியுள்ளனர். அப்போது மூச்சுத் திணறி அவர்கள் 3 பேரும் பலியாகினர்.
பலியானவர்கள் சத்ரபால் (25), அவரது உறவினர் ஹிமான்ஷு (22) மற்றும் அவரது தம்பி காஷிஷ் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சத்ரபால் முதலில் கிணற்றுக்குள் இறங்கியபோது உள்ளே இருந்த நச்சு வாயு காரணமாக சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது.
ஹிமான்ஷுவும் காஷிஷும் அவரைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று மயக்கமடைந்தனர். கிராமவாசி ஒருவரின் உதவிக்கான அலறல் சத்தத்தைக் கேட்டு, உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் கூடினர்.
பின்னர் உள்ளூர்வாசி ஒருவர், அவரது முகத்தில் ஈரமான துணியைச் சுற்றி, கயிற்றைப் பயன்படுத்தி கிணற்றுக்குள் இறங்கி, சகோதரர்களை ஒன்றாகக் கட்டி, அவர்களை வெளியே இழுத்தார்.
மோசமான நாள்களை எப்படி எதிர்கொள்வது? நந்திதா ஸ்வேதா பதில்!
பின்னர் அவர்கள் நூர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் எந்த சட்ட நடவடிக்கையையும் தொடர விரும்பவில்லை என்று போலீஸார் குறிப்பிட்டனர்.