புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்
சத்தீஸ்கரில் புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
பெங்களூரூ கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஜத் படிதார். இவர் தனது மொபைல் எண்ணை 90 நாள்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால், அவரது எண் செயல் இழந்து போனதால் அந்த எண் சத்தீஷ்கரைச் சேர்ந்த மணீஷ் நபருக்கு ஒதுக்கப்பட்டிருந்கிறது.
ஆனால் மணிஷுக்கு இது கிரிக்கெட் வீரர் ரஜத் படிதார் பயன்படுத்திய மொபைல் எண் என்று தெரியாது.
புதிய சிம் கார்ட்டை ஆக்டிவேட் செய்தபோது வாட்ஸ்அப்பில் ரஜத் படிதார் படம் இருந்துள்ளது. மேலும் ரஜத் படிதார் என நினைத்து இந்த எண்ணிற்கு விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரும் அழைத்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும் சம்மந்தப்பட்ட அந்த நபரை ரஜத் படிதார் தொடர்புகொண்டிருக்கிறார்.
ஆனால் யாரோ தன்னை கலாய்ப்பதாக எண்ணிய மணீஷ்கிண்டலாக தோனி பேசுகிறேன் என்று பதிலளித்துள்ளார். இந்த விஷயம் போலீஸுக்கு செல்லவே உடனே மணீஷ் வீட்டுற்கு அவர்கள் விரைந்துள்ளனர். இதன்பிறகே உண்மை என்ன என்பதை மணீஷ் அறிந்திருக்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?
பின்னர் அவரிடம் நிலமையை எடுத்து சொல்லி நம்பரை விட்டுக்கொடுத்துவிடுமாறு பேசியுள்ளனர்.
அதையடுத்து அந்த மொபைல் எண்ணை ரஜத் படிதாரிடம் கொடுக்க அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ரஜத் படிதார், மத்தியப் பிரதேச சைபர் செல் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.