செய்திகள் :

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் ரோஹித், கோலி ஓய்வா? சௌரவ் கங்குலி பதில்!

post image

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும், அவர்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

சௌரவ் கங்குலி கூறுவதென்ன?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் மிகவும் சிறப்பான சாதனைகள் படைத்திருப்பதாகவும், சிறப்பாக விளையாடும் வரை அவர்கள் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம் என உணர்வதாகவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

india's former captain sourav ganguly
சௌரவ் கங்குலி (கோப்புப் படம்)

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெறப்போகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அதனால், அந்த விஷயத்தில் என்னால் எதுவும் கூற முடியாது. அவர்கள் ஓய்வு பெறுவார்களா? மாட்டார்களா? எனக் கூறுவது மிகவும் கடினம்.

நன்றாக விளையாடுபவர்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இருவரும் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற அக்டோபர் 19 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஷஸ் தொடரில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா?

Former Indian captain Sourav Ganguly has spoken about the retirement of both senior Indian players Rohit Sharma and Virat Kohli from ODIs.

டிம் டேவிட், ஹேசில்வுட் அசத்தல்: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில்... மேலும் பார்க்க

வெற்றி பெறுவோம் என தொடர்ந்து நம்பிக்கையளித்த முகமது சிராஜ்; மனம் திறந்த ஆகாஷ் தீப்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என முகமது சிராஜ் தொடர்ந்து நம்பிக்கையளித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து... மேலும் பார்க்க

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா?

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயாராக இருப்பதாக மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக... மேலும் பார்க்க

சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!

ஆஸ்திரேலிய பேட்டர் டிம் டேவிட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.முதல் டி20யில் டாஸ் வென்ற தெ... மேலும் பார்க்க

முதல் டி20: ஆஸி. 10 ஓவரில் 88 ரன்கள், 6 விக்கெட்டுகள்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 88/6 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ... மேலும் பார்க்க