சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!
ஆஸ்திரேலிய பேட்டர் டிம் டேவிட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டி20யில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதிரடியாக தொடங்கிய ஆஸி. அணி முதல் 7.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் குவித்தது.
டாப் ஆர்டர் பேட்டர்கள் விரைவாகவே ஆட்டமிழந்ததால் டிம் டேவிட் பொறுமையாக விளையாட வேண்டிய சூழல் உருவாகியது.
பொறுமையாக விளையாடிய டிம் டேவிட் செனுரன் முத்துசாமி ஓவரில் (11.1) திடலை விட்டு வெளியே அடித்தார். இந்த சிக்ஸை அடிக்கும்போது 140.3 கி.மீ./மணி வேகத்தில் 109 மீட்டர் தூரத்துக்கு அடித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டிம் டேவிட் அதிவேக அரைசதம், சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
டிம் டேவிட் தனது 7ஆவது அரைசதத்தினை 29-ஆவது பந்தில் நிறைவு செய்தார்.
தற்போது, ஆஸி. அணி 14.4 ஓவர்களில் இந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.