சிஎஸ்கேவுக்கு வருகிறேனா? சஞ்சு சாம்சன் பதில்!
சிஎஸ்ஸ்கே அணியில் இணைவது பற்றி சஞ்சு சாம்சன் சிரித்துக்கொண்டே பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி 7,629 ரன்கள் குவித்துள்ளார்.
கடந்த சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார்.
சமீபத்தில் இவர் சிஎஸ்கே அணியில் இணைவதாக சமூக வலைதளங்களில் பேச்சு அதிகரித்தது.
தோனிக்கும் முட்டி வலி, வயது காரணமாக அடுத்த சீசனில் விளையாடுவாரா எனத் தெரியவில்லை.
இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் நேர்காணலில் சஞ்சு சாம்சனிடன், “நான் கேரளவுக்கு வந்துவிடுகிறேன். நீ தமிழ்நாட்டுக்கு மாறிவிடுகிறாயா?” எனக் கேட்டார்.
நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்த சாம்சன் , “அண்ணா, அதெல்லாம் என் கையில் இல்லை. நடந்தால் பார்ப்போம்” எனக் கூறிவிட்டார்.
டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதில் சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.