செய்திகள் :

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரை 2-2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது.

ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது. பவுண்டரியை தடுக்க முயன்று அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்யவில்லை. இருப்பினும், அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் காயத்துடன் தைரியமாக களமிறங்கினார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா?

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் கிறிஸ் வோக்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஓவல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்துக்காக கிறிஸ் வோக்ஸுக்கு ஸ்கேன்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தவுடன், அவரது தோள்பட்டை காயம் சரியாக இன்னும் எத்தனை வாரங்கள் தேவைப்படும் என்பது தெளிவாகத் தெரியவரும்.

இது தொடர்பாக பிபிசி ஸ்போர்ட்ஸில் கிறிஸ் வோக்ஸ் பேசியதாவது: எனக்கு காயம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதன் ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். ஆனால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தெரிவு அல்லது சரியான ஓய்வின் மூலம் சரிசெய்துகொள்ளும் தெரிவு என இரண்டு வழிகள் இருக்கின்றன. அறுவை சிகிச்சை செய்துகொண்டால், குணமடையும் காலம் அதிமாகும் என மருத்துவக் குழு தெரிவித்தது.

காயம் முழுமையாக குணமடைய மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் தேவைப்படும். அதனால், ஆஷஸ் தொடரில் விளையாடுவது கடினமாகிவிடும். சரிவர ஓய்வெடுத்தால் 8 வாரங்களில் குணமடைந்துவிடலாம் எனவும் கூறுகிறார்கள். அதனால், அதுவே சரியான தெரிவாக இருக்கும். இருப்பினும் என்னுடைய ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

There are doubts over whether England fast bowler Chris Woakes will play in the Ashes Test series against Australia.

அறிமுக வீரர் அசத்தல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3... மேலும் பார்க்க

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடந்து கொண்ட விதம் சரியா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.இந்தியா மற்... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்ற... மேலும் பார்க்க

பெங்களூரில் ரூ.1,650 கோடி செலவில் புதிய கிரிக்கெட் திடல்..! 80,000 இருக்கைகள்!

கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார். கர்நாடக வீட்டுவசதி வாரியம் அளித்த முன்மொழிவை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், மாந... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் நம்.3இல் களமிறங்கி, ... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; நியூசிலாந்து 476 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க