குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் 15,000 புகார்கள்!
குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுஞ்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பட்டியலின பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தேசிய உதவிஎண் (என்.எச்.ஏ.ஏ.) 14566-ஐ தொடர்புகொண்டு 15,303 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், 2022-இல் 3,755 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் 2023-இல் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 7,432 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜீவாலா, குற்றச்செயல்களுக்கு எதிரான தேசிய உதவிஎண் (என்.எச்.ஏ.ஏ.) வழியாக மாநில வரியாக எத்தனை புகார்கள் பெறப்பட்டுள்ளன என்பதைக் குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள பதிலில், குஜராத்தை பொருத்தவரையில்,
2020-இல் ---> 191
2021-இல் ---> 705
2022-இல் ---> 3,755
2023-இல் ---> 7,432 (கணிசமாக அதிகரிப்பு)
2024-இல் ---> 2,144 (அதன்பின் சரிவு)
2025-இல் ---> 1,076 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சியாக கோலோச்சி வரும் பாஜக அரசுக்கு களங்கத்தை விளைவிப்பதாக மேற்கண்ட தரவுகள் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.