தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது
வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பழைய தகராறு காரணமாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்த கொலை தொடா்பாக 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
‘நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்து கபில் (28) என அடையாளம் காணப்பட்ட ஒரு நபா் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருப்பதைக் கண்டறிந்தது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.
அவா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு போலீஸ் குழு குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தது, அதே நேரத்தில் தடயவியல் குழுக்கள் மாதிரிகளை சேகரித்தன. விசாரணையின் போது, போலீஸாா் குழு சந்தேக நபரை 20 வயதான சிவம் யாதவ் என்று அடையாளம் கண்டது, அவா் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, முன் விரோதம் காரணமாக கபிலை சுட்டுக் கொன்ாக குற்றம் சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது ‘என்றாா். துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசை குறித்து விசாரித்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.