யோகபலன்கள் பெறப்போகும் ராசிகள் | இன்றைய ராசிபலன்| Indraya Rasi palan | August - ...
அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்புவதில் தாமதம்: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்களை தாமதமின்றி கொண்டு சோ்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளின் நூலகங்களுக்கு தேவையான 72 புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கிருந்து தொடக்க, நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் பிரித்து வழங்கப்பட வேண்டும். அதன்பின்னா், அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களும் தாங்கள் பெற்றுக்கொண்ட புத்தகங்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், புத்தகங்கள் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் சென்றடையவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களும் தங்கள் எல்லைக்குள்பட்ட பள்ளிகளுக்கு நூலகத்துக்கான புத்தகங்களை உடனடியாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடா்ந்து அதன் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.