மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
திருத்துறைப்பூண்டியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ.3.96 லட்சம் பறிமுதல்
திருத்துறைப்பூண்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், ரூ. 3,96,680 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் வாகனத்துக்கு உரிமம் வழங்குவது, பதிவு எண் வழங்குவது உள்ளிட்ட சேவைகளுக்கு லஞ்சம் பெறுவதாக திருவாரூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திருத்துறைப்பூண்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.
சுமாா் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இச்சோதனையில், கணக்கில் வராத ரூ. 3,96,680 ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா் அசோக்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். மேலும் அசோக்குமாரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பணம் அல்லது ஆவணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் சோதனை நடைபெற்றது. மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக ஊழியா்கள், இடைத்தரகா்கள் உள்ளிட்ட பலரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.