செய்திகள் :

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

post image

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

அதற்கு முன்னதாக, ‘போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் நிலப்பகுதி பரிமாற்றங்களும் இடம் பெற்றிருக்கும்’ என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஸெலென்ஸ்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனின் இறையாண்மையையும், எல்லை மாண்பையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்.

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்த முடிவும் உண்மையான அமைதிக்கு எதிரானது மட்டுமில்லை, அது தோல்வியில்தான் முடியும். வெற்று வாக்குறுதிகளைத் தவிர அது வேறு எதையும் கொண்டுவராது.

உக்ரைன் மக்களுக்கு கௌரவமான சமாதானம் வேண்டும். எங்கள் எல்லைகளையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கும், சா்வதேச சட்டங்களுக்கு ஏற்ற அமைதி ஒப்பந்தம்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கில் இருந்து எங்களை யாரும் திசைத்திருப்ப முடியாது.

போரை நிறுத்த எங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்த ரஷியாவுடன் எங்கள் நிலப்பகுதிகளை பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறப்படுவதை நான் நிராகரிக்கிறேன். எங்கள் நிலப் பகுதிகள் பேரம் பேசுவதற்குரியவை அல்ல.

ஆக்கிரமிப்பாளா்களிடம் எங்கள் பகுதிகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம். அது, ரஷியா்களின் செயலுக்காக அவா்களுக்கு பரிசளித்தது போல் ஆகும். அமைதியை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, குறிப்பாக டிரம்ப் தலைமையிலான முயற்சிகளை நான் வரவேற்கிறேன். ஆனால், எந்த பேச்சுவாா்த்தை, எங்கு நடத்தப்பட்டாலும் அதில் உக்ரைன் பங்கேற்காவிட்டால்—அது வெற்றி பெற முடியாது.

எங்கள் பின்னால் மறைவாக எடுக்கப்படும் ஒப்பந்தம் ஒரு வெற்று ஒப்பந்தமாகவே இருக்கும். அது நாங்கள் தேடும் நிரந்தர அமைதியை கொண்டுவர முடியாது. அமைதியை ஏற்படுத்த நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். ஆனால் உக்ரைனின் இறையாண்மையை மதிக்கும் வகையில் அந்த நாடுகளின் நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்றாா் ஸெலென்ஸ்கி.

5 மாதங்களுக்குப்பின்... விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆன... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! - உக்ரைன் மக்கள் கருத்து!

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதி... மேலும் பார்க்க

லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுண... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை! ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இந்தியா - பாக். இடையே சொற்போர்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு பத... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 50% வரி விதிப்பால் இந்தியா, ரஷியா, சீனா கைகோக்கும்! ஜான் போல்டன் எச்சரிக்கை

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்து உத்தரவிட்டிருப்பதால் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும் என்றும் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் முன்னாள் அமெரிக்க தேசிய ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாக். போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! -விமானப்படை தளபதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின்... மேலும் பார்க்க